“பாஜக-வின் டப்பா இன்ஜின் முன் திராவிட மாடல் சூப்பர் இன்ஜின் ஒரு போதும் தலைகுனியாது!” – ஸ்டாலின் | trichy mk stalin campaign for 2026 assembly election

Spread the love

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதே போல், துறையூர் தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில் அங்கு போட்டியிட உள்ள வேட்பாளருக்கும் ஆதரவு திரட்டினார்.

அதனைத்தொடர்ந்து, திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

“நான் மீண்டும் மீண்டும் திருச்சிக்கு வருவது போல் திராவிட மாடல் அரசும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். கடந்த 2021 தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் முழு வெற்றியை தந்து இரண்டு சிறப்பான அமைச்சர்களை தந்துள்ளீர்கள். அதே போல வரும் தேர்தலிலும் நூறு சதவீத வெற்றியை தருவீர்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.

திருச்சிக்காக பல்வேறு முத்திரை திட்டங்களை செய்து கொடுத்துள்ளோம் என்கிற உரிமையோடு நான் வாக்கு கேட்கிறேன். பஸ் ஸ்டாண்ட் ஏர்போர்ட்டை மிஞ்சும் அளவிற்கு உள்ளது என பக்கத்து மாநிலத்தவர் வியந்து போய் வீடியோ போடும் அளவிற்கு கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் பேருந்து நிலையம், 9 கூட்டு குடி நீர் திட்டங்கள், சூரியூரில் மினி ஸ்டேடியம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம், துறையூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, மணப்பாறையில் சிப்காட் உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *