பாஜக-வை எச்சரித்த ஷிண்டே; மகாராஷ்டிரா: உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு – ஏன் | Maharashtra local body elections: Shinde clashes with BJP, opposition parties disappear-

Spread the love

தேர்தலுக்கு முன்பே பா.ஜ.கவிற்கு தாவிய வேட்பாளர்கள்

பத்லாப்பூர் நகராட்சி தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக போட்டியிடும் 7 வேட்பாளர்களை பா.ஜ.க தேர்தலுக்கு முன்பே தங்களிடம் சேர்த்துக் கொண்டுள்ளது.

நகராட்சி தலைவருக்கான தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் ருசிதாவை ஆதரிக்கப் போவதாக அந்த 7 பேர் தெரிவித்துள்ளனர். இதனால் உத்தவ் தாக்கரே அதிர்ச்சியடைந்துள்ளார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

பாராமதி, புர்சுங்கி–உருளி தேவாச்சி, தலேகாவ் தபாடே, லோனாவ்லா, டவுண்ட் மற்றும் சாஸ்வாத் ஆகிய பகுதிகளுக்கான தேர்தல்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இங்கும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு எதிராக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு தாமதமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும், தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மாநில தேர்தல் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று சந்திராப்பூர், நாண்டெட், அமராவதி, கட்சிரோலி, அகோலா போன்ற மாவட்டங்களிலும் கணிசமான நகராட்சிகளில் சில வார்டுகளில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மகாராஷ்டிரா தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி இத்தேர்தல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *