வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளசரவாக்கம் ஆற்காடு சாலை கே.எப்.சி. முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது.
மெட்ரோ ரெயில் பணி
இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் நேற்று முன்தினம் தனது காரில் அவ்வழியே வந்தபோது தடுப்புகளை அகற்றி செல்ல முயன்றார்.
இது குறித்து கேட்க மெட்ரோ ரெயில் கட்டுமான திட்ட உதவி மேலாளர் வடிவேல் கேட்டபோது பாடகர் வேல்முருகன் மதுபோதையில் அவதுறான வார்த்தையால் திட்டி, தாக்கினார்.
தாக்குதல்
இந்த மோதலில் காயமடைந்த வடிவேல் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார்.
இதுகுறித்து மெட்ரோ திட்ட அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
கைது
போலீசார் மெட்ரோ திட்ட உதவி மேலாளரை தாக்கியதாக பாடகர் வேல்முருகன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், தாக்குதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர். பின்னர் பாடகர் வேல் முருகனை எச்சரித்து, எழுதி வாங்கி கொண்டு காவல்நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
அவர் ஏற்கனவே இதேபோன்று, கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மது போதையில் சென்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோபாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.