மகாராஷ்டிர மாநிலம் பால்கார் மாவட்டத்தில் காதில் ஹெட்போன் அணிந்தப்படி தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுமி, ரயில் மோதியதில் பலியானார்.
பால்காரின் மக்னே கிராமத்தைச் சேர்ந்த வைஷ்னவி ராவல் (வயது 16) எனும் சிறுமி, நேற்று (ஜன.23) மதியம் காதில் ஹெட்போன் அணிந்தப்படி சப்பாலே மற்றும் கெள்வே சாலை ரயில் நிலையங்களுக்கு மத்தியிலுள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். சிறுமியின் காதில் ஹெட்போன் அணிந்திருந்ததினால் அங்கு வந்துக்கொண்டிருந்த ரயிலை அவர் கவனிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த கொசுவெளி-அம்ரித்சர் அதிவிரைவு ரயில் சிறுமி மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர், உடனடியாக அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்தவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: மகாராஷ்டிரம்: மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலையில் விபத்து! 8 பேர் பலி!