பாட்டல் ராதா வெளியீட்டுத் தேதி!

Dinamani2f2024 12 182f5n80xgfo2fscreenshot 2024 12 18 115051.png
Spread the love

குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள பாட்டல் ராதா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருகிறார்.

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தயாரிப்பாளராக துவங்கியவர், தொடர்ந்து இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜே பேபி, தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார்.

இதையும் படிக்க: சூரி படத்தில் ஸ்வாசிகா!

தற்போது, பா. இரஞ்சித் தன் இணை இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்தை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார். இப்படத்திற்கு, ‘பாட்டல் ராதா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நாயகனாக குரு சோமசுந்தரமும், இவருக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜனும் முக்கிய கதாபாத்திரங்களில் பாரி இளவழகன் (ஜமா), ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மதுப்பழக்கத்தால் சீரழியும் நாயகனின் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதன் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *