பாரீஸ் ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஆடவர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 வயதான இந்தியாவின் லக்ஷயா சென் மற்றொரு இந்திய வீரரான ஹெச்.எஸ்.பிரனாயை வீழ்த்தி காலிறுதியில் முன்னேறினார்.
லக்ஷயா சென் இன்று (ஆக.2) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 12-ஆம் நிலை வீரரான சீன தைபே வீரர் சோ டைனை எதிர்கொண்டார்.
முதல் செட்டினை சோ டைன் கைப்பற்ற அடுத்த 2 செட்களையும் லக்ஷயா சென் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
லக்ஷயா சென் பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவாலுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் பாட்மின்டன் ஒற்றையர் அரையிறுதிக்குள் நுழைந்த முதல் இந்திய ஆண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அவர் பதக்கம் வெல்வதற்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே எஞ்சியுள்ளது. லக்ஷயா சென்னுக்கு முன்னதாக, கிடாம்பி ஸ்ரீகாந்த் (2016), பருபள்ளி காஷ்யப் (2012) ஆகியோர் கால் இறுதிக்குள் நுழைந்திருந்தனர்.