பாட்மின்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்ற லக்ஷயா சென், பிவி சிந்து!

Dinamani2f2024 07 312fz37eg2uc2fbadmin.jpg
Spread the love

உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழாவான ஒலிம்பிக் போட்டி நிகழாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடைபெற்று வருகின்றன.

2024-இல் பாரீஸில் ஜூலை 26-இல் தொடங்கி ஆக. 11-ஆம் தேதி வரை நடைபெறுவது 33-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும். இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தம் 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பாட்மின்டனின் இந்திய வீரர் லக்ஷயா சென், வீராங்கனை பி.வி. சிந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளார்கள்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக்/ சிராக் இணை காலிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.

இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 21-05, 21-10 என்ற நேர் கேம்களில் வென்றுள்ளார்.

லக்ஷயா சென் உலகின் நம்.4 வீரருடன் மோதி 21-18, 21-12 நேர் கேம்களில் வென்று அசத்தினார். இதன்மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *