பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயரதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை ஒன்று ஜெய்சால்மெர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கு மேலாளராக பணியாற்றிய மஹேந்திர பிரசாத் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடைபெறுவதாக இன்று(ஆக. 5) போலீஸார் தெரிவித்தனர்.