பாதுகாப்புப் பணியில் 1000 போலீஸார்: சென்னையில் களைகட்டிய தீபாவளி விற்பனை | 1000 policemen on security duty for diwali

1379588
Spread the love

சென்னை: சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் நேற்று தீபாவளி புத்​தாடைகள் விற்​பனை களை​கட்​டியது. தியாக​ராய நகர், புரசை​வாக்​கம், வண்​ணாரப்​பேட்​டை, குரோம்​பேட்டை உள்​ளிட்ட பகு​தி​களில் உள்ள துணிக் கடைகளில் மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்​டிகை வரும் அக்​.20-ம் தேதி திங்​கள்​கிழமை வரு​கிறது. பண்​டிகைக்​காக பலர் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு வரும் வெள்​ளி, சனிக்​கிழமை​யில் செல்​லத் திட்​ட​மிட்​டுள்​ளனர்.

இந்​நிலை​யில் தீபாவளிக்கு முந்​தைய கடைசி விடு​முறை நாளான நேற்​று, தங்​கள் குழந்​தைகள், பெற்​றோர், உறவினர்​களுக்கு புத்​தாடைகளை வாங்க பொது​மக்​கள் திட்​ட​மிட்​டிருந்​தனர். அதனால் சென்​னை, புறநகர் பகு​தி​களில் உள்ள துணிக்​கடைகளில் நேற்று காலை முதலே பொது​மக்​கள் கூட்​டம் அலைமோதி​யது.

குறிப்​பாக சென்​னை, தியாக​ராய நகர், ரங்​க​நாதன் தெரு முழு​வதும் மனித தலைகளாக தென்​பட்​டன. பாது​காப்​புப் பணி​யில் சுமார் 1000 போலீ​ஸார் ஈடு​படுத்​தப்​பட்​டனர். அவர்​கள் உயர் கோபுரங்​களை அமைத்​து, திருடர்​களிடம் எச்​சரிக்​கை​யாக இருக்​கு​மாறு ஒலிபெருக்​கி​யில் அறி​வித்​தவண்​ணம் இருந்​தனர். சாதாரண உடை​யிலும் கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர். தியாக​ராய நகர் பகு​தி​யில் ரங்​க​நாதன் தெரு, உஸ்​மான் சாலை, பாண்டி பஜார் போன்ற இடங்​களில் மக்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது.

அப்​பகு​தி​களில் உள்ள துணிக் கடைகளில் காலை முதலே உள்ளே நுழைய முடி​யாத அளவுக்கு மக்​கள் கூட்​டம் அலை மோதி​யது. துணிக் கடைகளுக்கு இணை​யாக சாலை​யோரக் கடைகளி​லும் துணி​கள் மற்​றும் அணி​கலன்​கள் விற்​பனை அனல் பறந்​தது. நேற்று சென்​னை, புறநகர் பகு​தி​யில் வானம் மேகமூட்​டத்​துடன் காணப்​பட்​ட​தா​லும், அவ்​வப்​போது சிறு தூரல் மழை பெய்​த​தா​லும், துணிக் கடைகளுக்கு வந்த மக்​கள் ரம்​மிய​மான குளிர்ந்த சூழலை ரசித்​த​படி பொருட்​களை வாங்​கினர்.

புத்​தாடைகளை வாங்​கிய பின் அனை​வரும் உணவகங்​களை நோக்​கிச் சென்​ற​தால், உணவகங்​களி​லும், இனிப்​பகங்​களி​லும் மக்​கள் கூட்​டம் நிரம்பி வழிந்​தன. இதே​போன்று புரசை​வாக்​கம் நெடுஞ்​சாலை, பழைய வண்​ணாரப்​பேட்டை எம்சி சாலை, புறநகர் பகு​தி​களான தாம்​பரம், குரோம்​பேட்​டை, பள்​ளிக்​கரணை, பூந்​தமல்லி கடை வீதி​களில்​ நேற்​று மக்​கள்​ கூட்​டம்​ அலைமோ​தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *