ஆதார் – பான் இணைப்பிற்கு என்ன செய்ய வேண்டும்?
வருமான வரி இ-ஃபைலிங் வலைதளத்திற்கு செல்லவும்.
ஹோம் பக்கத்தில் உள்ள “Link Aadhar’-ஐ கிளிக் செய்யவும்.
அடுத்த பக்கத்தில், பான் எண், ஆதார் எண் மற்றும் பெயரை பதிவிடவும்.
மொபைல் நம்பருக்கு வரும் OTP-ஐ நிரப்பவும்.
முந்தைய இணைப்பு கெடு தேதியை மிஸ் செய்தவர்களுக்கு ரூ.1,000 அபராதம் கேட்கும். அதை இ-பே மூலம் கட்டவும்.
அடுத்ததாக, ‘Submit’ கொடுக்கவும்.
அடுத்த 3 – 5 நாள்களில் உங்களது ஆதார் – பான் இணைப்பு வருமான வரி இணையதளத்தில் அப்டேட் ஆகிவிடும்.

ஏற்கெனவே உங்களது பான் கார்டு செல்லாமல் ஆகிவிட்டதா?
வருமான வரி இணையதளத்திற்குள் செல்லவும்.
மேலே சொன்ன நடைமுறை மூலம் அபராதம் கட்டி, பதிவு செய்யவும்.
அடுத்த 30 நாள்களுக்குள் பான் கார்டு செயல்பாட்டிற்கு வந்துவிடும்.