பாபா சித்திக் கொலை
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபா்கள் சனிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.
மூன்று முறை எம்எல்ஏவான இவா், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்தார்.
நிா்மல் நகா் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
பிரபல ரெளடி லாரன்ஸ் பிஸ்னொய்க்கு இந்த கொலை வழக்கில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.