பாமகவில் இருந்து ஜி.கே.மணியை நீக்கம் செய்திருப்பதாக பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராமதாஸ் அதரவாளரும், பாமக எம்எல்ஏ- வுமான ஜி.கே.மணியை பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கியிருக்கிறார்.

இதுதொடர்பாக அன்புமணி தரப்பில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ” பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு. ஜி.கே.மணி அவர்கள் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், கட்சியின் அமைப்பு விதி 30-இன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18.12.2025&ஆம் நாள் அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.