பாமக: “அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் தான் கண்ணீர் வடிக்கிறார்”- ஜி.கே மணி | gk mani slams anbumani

Spread the love

“ராமதாஸ் – அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தால், நான் பாமகவில் இருந்து விலக தயார்’ என்று பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி பேசியிருக்கிறார்.

சென்னையில் இன்று (டிச.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே மணி, “அன்புமணி இன்றைக்கு நிறைய விஷயங்களைப் பேசுகிறார்.

ஆனால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். இன்றைக்கு பாமக வளர்ந்ததற்கு ராமதாஸ்தான் முக்கிய காரணம்.

பாமகவுக்கு ஒரு சோதனை என்றால், ராமதாஸால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் தான் கண்ணீர் வடிக்கிறார்.

என்னைப் பார்த்து, எங்கள் கட்சியில் உழைத்தவர்களைப் பார்த்து ராமதாஸ் உடன் இருப்பவர்களை எல்லாம் பார்த்து அன்புமணி துரோகி என்கிறார்.

ஜி.கே.மணி தான் என்னையும், எங்க அப்பாவையும் பிரித்துவிட்டார் என்று சொல்கிறார்.

இதெல்லாம் எவ்வளவு வேதனையாக இருக்கும். அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்குமாறு ராமதாஸை நான்தான் சம்மதிக்க வைத்தேன்.

இதுகுறித்து பேசும்போது ராமதாஸ் என் மீது மிகவும் கோபப் பட்டார். அன்புமணிக்கு எந்த வகையிலும் நான் கெடுதலோ, துரோகமோ நினைத்ததில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *