பாமக: அன்புமணி, தேர்தல் ஆணையம் இணைந்து மோசடி செய்ததாக ஜி.கே.மணி குற்றச்சாட்டு | GK Mani Accuses Election Commission of ‘Fraud’ After Recognising Anbumani Ramadoss as PMK President Till 2026

Spread the love

டெல்லியில் ராமதாஸ் PMK போராட்டம்

அத்துடன், “இவ்வளவு பெரிய மோசடி நடந்ததுதான், இன்னைக்கு அதிர்ச்சியாக மிகப்பெரிய கண்டனத்துக்குரியதாக பார்க்கிறோம். இதை கட்சி திருட்டு நடவடிக்கையாக பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை கட்டி காக்க வேண்டும். இப்படி ஒரு மோசடியான உத்தரவை நேற்று வெளியிட்டு, இன்றைக்கு எங்கள் கையில் கொடுக்கிறார்கள். அது ரொம்ப அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

மருத்துவர் அன்புமணி 2023ஆம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், அவருடைய பதவி காலம் 2026 வரை இருக்கிறது என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். நாங்கள் கொடுத்த ஆவணங்களைக் குறிப்பிட்டு உங்களுக்கு நியாயம் வேண்டுமென்றால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்கிறார்கள். ஆவணங்கள் எல்லாம் சரியா இருக்கிறது… நாங்கள் எதற்கு நீதிமன்றத்துக்குப் செல்ல வேண்டும்? இது கண்டிக்கத்தக்கது.

இதை கண்டித்து மருத்துவர் ஐயா, ‘டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்துவோம்’ என்று சொல்லியிருக்கிறார். நடந்திருப்பது ஜனநாயகப் படுகொலை.” எனப் பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *