பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

dinamani2F2025 08 102Fs7q5spjo2Fpmk magalir manadu
Spread the love

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற பெண் நிர்வாகிகளும் தீர்மானத்தை வாசித்தனர்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒழிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்குச் செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்குள்ளாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் பெண் காவலர்களை நியமிக்க வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நாள்களின் எண்ணிக்கை மற்றும் கூலியை உயர்த்த வேண்டும்.

பெண்கள் தொழில் கல்வி, ஆராய்ச்சி கல்வி பெறும் வகையில் கூடுதலாக மகளிர் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட வேண்டும்.

ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் கர்பப்பை, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதால், அவர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும்.

வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீடை காலம் தாழ்த்தாமல் ஒதுக்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடக்கப்பட வேண்டும்.

வறுமையில் வாடும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதையும் படிக்க | கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

A women’s conference was held today on behalf of the Vanniyar Sangam in Poombukari, Mayiladuthurai district

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *