அன்புமணி தரப்பு: “தேர்தல் ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின்படி அன்புமணி தான் தலைவர். அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் உட்கட்சி விவகாரங்களில் ஆணையம் தலையிட முடியாது. ஏற்கனவே எங்களுக்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தை பொருத்தவரைக்கும் தெளிவுபடுத்தி விட்டது. தங்களிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணி தான் தலைவராக இருக்கிறார் என்று கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது இதில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. மேலும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என்று தெளிவாக விதி உள்ளது”

தலைமை நீதிபதி: “தேர்தல் ஆணையம் கட்சிக்குள் பிரச்சனை எழுந்தால் தலையிடுவதற்கு அதிகாரம் உள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் உரிமைக்குரல் விவகாரத்தில் முடிவு தெரியும் வரை சின்னத்தை முடக்கி வைக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறது
பாட்டாளி மக்கள் கட்சி சின்ன விவகாரத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மிகவும் பாதுகாப்பான முறையில் பிரண்ட்லி மேட்ச் விளையாடுகிறது” என்று தெரிவித்தது.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு: “`ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இரு தரப்பினரும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக 2 நாட்களுக்குள் சிவில் நீதிமன்றத்தில் புதிய மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த மனுக்களின் அடிப்படையில், சிவில் நீதிமன்றம் அடுத்த 3 நாட்களுக்குள்ளாக வழக்கை விசாரித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும்.
உத்தரவைப் பிறப்பித்த பிறகு கலகலப்பாகப் பேசிய தலைமை நீதிபதி, ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பைப் பார்த்து, “நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது” எனச் சிரித்தபடி நகைச்சுவையாகக் கூறி வழக்கை முடித்து வைத்தார்.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் பாமகவின் “மாம்பழம்” சின்னம் யாருக்கு என்பது உறுதியாகத் தெரியவரும்.’