பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஒரு கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மகளிருக்கான 400 மீட்டர் (டி20) போட்டியில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி மூன்றாமிடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்தார்.