பாராளுமன்ற தேர்தல் முடிந்து உள்ள நிலையில் மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை (ஜூன் 24) தொடங்கி வரும் ஜூலை 3 ந்தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் மாநிலங்களவை வருகிற 27ந்தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நடைபெற உள்ளது.
பதவி ஏற்கிறார்கள்
27ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். நாளையும், நாளை மறுநாளும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்கிறார்கள்.அவர்களுக்கு மக்களவை இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
வரும் 26ம் தேதி மக்களவை தலைவர் (சபாநாயகர்) தேர்தல் நடைபெறவுள்ளது. தற்காலிக மக்களவை சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரசுக்கும் மோதல் இருந்து வருகிறது. அதனால் புதிய எம்பிக்களுக்கு பதவி ஏற்பு செய்து வைப்பதற்கு உதவும் வகையில் நியமிக்கப்பட்ட குழுவில் சேராமல் புறக்கணிக்க எம்பிக்கள் குழு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, புதிய மக்களவை தலைவராக யாரை தேர்வு செய்வார்கள்? என்ற கேள்வியும் நீடித்து வருகிறது. சபாநாயகர், துணை சபாநாயகர் விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் மோதல்கள் அதிகரித்துள்ளதால், தேர்தல் முறையில் அவர்கள் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குடியரசுத் தலைவரின் உரையை தொடர்ந்து, அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பிரதமரின் பதில் உரையும் வரும் ஜூலை 3ம் தேதி வரை நடைபெறும்.
இதேபோல் நீட் தேர்வு முறைகேடு விவகாரம், ரயில்வே பாதுகாப்பு விசுவரூபம் எடுத்து உள்ள நிலையில் பாராளுமன்ற கூட்டம் தொடங்குகிறது. இதனால் இந்த கூட்டத்தொடர் பரபரப்பாக இருக்கும்.
இதையும் படியுங்கள்: