வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்

Gpjzfonwoaazksa
Spread the love

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மொத்தம் 543 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை (ஜூன் 4) எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும்.

ஏற்பாடுகள் தயார்

இதையொட்டி நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் அனைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. காலை முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது.
காலை 10 மணிக்குள் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற முன்னணி நிலவரம் தெரிந்துவிடும். இதனால் அரசியில் கட்சியினர் உச்சகட்ட பரபரப்பில் உள்ளனர். பல அரசியல் பிரமுகர்கள் வெற்றி பெறவேண்டி கோவில்களி சிறப்பு பூஜைகள், வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Gpjzd2sxgaalbg

தமிழகத்தில்

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கான வாக்குஎண்ணிக்கை ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:-

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 39 மையங்களிலும் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட 58 பொது பார்வையாளர்கள் வந்து விட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின் போது, ஒவ்வொரு சுற்றின் விவரமும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, தலைமைச் செயலகத்தில் கட்டுப்பாட்டறை உள்ளது. கட்டுப்பாட்டறையில், 12 டிஆர்ஓக்கள் பணியில் இருப்பார்கள். அவர்கள் புகார்களை கவனிப்பார்கள்.

8 மணிக்கு தொடங்கும்

தபால் வாக்குகளைப் பொறுத்தவரை, சுற்றுவாரியாக எண்ணப்படாது. தபால் வாக்குகள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் உள்ள கையொப்பம் சரியாக உள்ளதா? என்பதை பார்த்து, எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். தபால் வாக்குகள் எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும். 8.30 மணிக்கு தபால் வாக்கு எண்ணி முடிக்காவிட்டாலும், மின்னணு இயந்திர வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படும்.

தபால் வாக்குகள் இல்லாவிட்டால், மின்னணு வாக்குகள் 8 மணிக்கு எண்ணப்படும்.
வேட்பாளர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அவர் கூறும் எந்திரங்களை தேர்தல் பார்வையாளர்கள் முடிவு செய்து அதை எண்ண அனுமதிப்பார்கள். தபால் வாக்குடன் இணைத்து, ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் மின்னணு தபால் வாக்கும் எண்ணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Election Commissionar

தலைமை தேர்தல் கமிஷனர் பேட்டி

முன்னதாக இன்று(3ந்தேதி) மதியம் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் டெல்லியில் நிருபர்களிடம் கூறும்போது,இந்த தேர்தலில், 64.20 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது ஒரு உலக சாதனை.கடந்த 2019 மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் இந்த தேர்தலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே மறுவாக்குப்பதிவு நடைபெற்றது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவாக ஜம்மு காஷ்மீரில் அதிக வாக்காளர்கள் வாக்களித்துள்ளது பாராட்டுக்குரியது. தேர்தல் காலத்தில் கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் கோடியை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம். 2019ல் கைப்பற்றப்பட்ட மதிப்பை விட இது கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்.

வெளிப்படைத்தன்மை

நாளை(4ந்தேதி) நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. துரிதமாக செயல்படுவது வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, பதில்கூறும் பொறுப்பை ஏற்று செயல்படுவது என நாங்கள் செயல்பட்டுள்ளோம்.

அந்த வகையில் இந்திய தேர்தல் ஆணையம் நிகரற்ற நம்பகத்தன்மையைக் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய தேர்தல் பணியை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது உண்மையில் ஒரு அதிசயம். உலகில் இதற்கு இணை எதுவும் இல்லை என்றார்.

இதையும் படியுங்கள்: சட்டசபை தேர்தலில் அருணாசலபிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *