பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருந்து 5 தடகள வீரர்கள் தேர்வாகி இருந்த நிலையில், ஒலிம்பிக் வரலாற்றில் தமிழ்நாட்டில் இருந்து அதிக தடகள வீரர்கள் தேர்வாகி இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இதனிடையே பாரிஸ் 2024க்கான இந்திய ஒலிம்பிக் தடகள அணியில் இடம்பிடித்த தமிழக வீரர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன், சுபா வெங்கடேசன், பிரவீன் சித்திரவேல், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 பேரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து வந்தவர்கள் என்பதில் பெருமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.