பாரீஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வெளியேறினார்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சீன வீராங்கனை பிங் ஜியோவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 21 – 19, 21 – 14, என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.