பாரீஸ் ஒலிம்பிக்: வெண்கலம் வென்றார் அமன் ஷெராவத்!

Dinamani2f2024 08 092fq1hbovku2fwrestlling20aman20sherawat20edi.jpg
Spread the love

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இதன்மூலம் நடப்பு ஒலிம்பிக்கில் 6வது பதக்கம் (ஒரு வெள்ளி, 5 வெண்கலம்) கிடைத்துள்ளது.

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 57 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்தப் போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத், புயேர்ட்டோ ரிகோவைச் சேர்ந்த டாரியன் க்ரூஸை 13-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் நடப்பு ஒலிம்பித் தொடரில் இந்தியாவுக்கு 6வது பதக்கம் கிடைத்துள்ளது. நேற்று நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றிருந்தார். இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருந்தது.

தற்போது இந்தியா, ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என புள்ளிப் பட்டியலில் 65வது இடத்தில் உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *