பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக பத்து நபர்கள் சிறையில்.!
பத்து வொர்ஸ்ட் பர்ஃபார்மர்களும் அதற்கான காரணத்தை தாங்களே போர்டில் எழுதி கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற தண்டனையை பிக் பாஸ் தந்தார்.
‘அணி ஒற்றுமை இல்லை’ என்பது வினோத்தின் காரணம்.
‘இது மத்தவங்க கருத்து’ என்பது ஆதிரையின் காரணம்.
‘எனக்கு காரெக்டரே புரியலை’ என்று ஆச்சரியப்படுத்தினார் அமித். (ச்சே.. அந்த இடத்துல நான் இருந்திருக்கணும். கர்ணன் சிவாஜியாவே மாறியிருப்பேன் – திவாகர்).
“எனக்கு உடம்பு சரியில்ல. கேரக்டரும் புரியல” என்றார் ரம்யா. (இவர் தேவயானி காரெக்டர் செய்தார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?!)
“நான் என்னுடைய பெஸ்ட்-ஐ கொடுத்தேன். என்னால இதை ஏத்துக்க முடியாது” என்று கோபமடைந்த திவ்யா, சிறைக்குள் சென்ற பிறகும் கோபம் தீராமல் கத்தினார்.
“எனக்கு தரப்பட்ட கேரக்டர் கிளாசிக்கல் டான்ஸர் என்றாலும் டான்ஸை தப்பா ஆடிடக்கூடாதுன்னு ஆடலை” என்று திவ்யா சொன்ன காரணம் வினோதமானது.
மத்தவங்க எல்லாம் சரியாவா பண்ணாங்க?! “நீங்க எல்லோருமே பாரபட்சமா ஓட்டு போட்டீங்க..” என்று மற்றவர்களின் மீது பாய்ந்தார் திவ்யா.
ஆதிரை பற்றி தவறாக சொன்ன கமெண்ட் காரணமாக, அவருடன் முதலில் மல்லுக்கட்டிய கம்மு, பிறகு “வேணும்னா கால்ல விழறேன். போதுமா?” என்று திடீரென காலில் விழுந்தார். (இந்த சீசனில் இது மூன்றாவது சம்பவம்!). பிறகு கம்முவிற்கும் அரோவிற்கும் இடையில் மோதல்.
“யார்.. அந்த ஆதிரை.. அவ சொன்னான்னு என் கிட்ட வந்து பேசற… துஷார் வெளியே போனதுக்கு நீதான் காரணம்ன்னு நான் சொல்லட்டுமா? இப்ப ஓப்பனா சொல்றேன்.. அதுதான் காரணம்.. நீதான் அவன் கிட்ட பேசிப் பேசி வெளியே அனுப்பிச்சிட்ட” என்று கம்மு உடைத்துப் போட தனிமையில் சென்று அழுதார் அரோ.