“பலூன்’ படத்தின் இயக்குநர் சினிஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற ‘பார்க்கிங்’ படத்தைத் தயாரித்திருந்தார்.
அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது.
அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படம், மற்றொன்று ‘ஃபைனலி’ பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படம்.
இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
தயாரிப்பாளர் சினிஷும் இயக்குநர் நெல்சனும் காலேஜ்மேட்ஸ். சினிஷ் குறித்து நெல்சன், அவருடைய வழக்கமான கலாய் மோடிலேயே பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
நெல்சன், “தயாரிப்பாளர் சினிஷ் என்னுடைய காலேஜ் மேட். காலேஜ்ல மாஸ் காட்டுறதுக்காகப் பலரும் பஸ் டாப்ல ஏறி நின்னுட்டு வருவாங்க.
அப்படி அவரும் டாப்ல வந்தபோதான் முதன்முதல்ல அவரைப் பார்த்தேன். டாப்ல நிக்கும்போதும் பயந்துட்டேதான் நின்னுட்டு வந்தாரு.
பிறகு க்ளாஸ்ல என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாரு. ‘நீங்கதான் பஸ்ல நின்னுட்டு வந்தது’னு கேட்டேன். ‘ஆமா, நல்லா இருந்ததா’னு கேட்டாரு.