பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பரில் ஐ. நா. அவையில் பாலஸ்தீன் தனி நாடாக அங்கீகரிக்கப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மெர் செவ்வாய்க்கிழமை(ஜூலை 29) அறிவித்துள்ளார்.
காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நிறுத்தவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். போர் நிறுத்தத்திற்கு உடன்பட இஸ்ரேலை அவர் வலியுறுத்தியுள்ளார்.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 59,733 போ் உயிரிழந்துள்ளதாகவும், 1,44,477 போ் காயமடைந்துள்ளதாகவும் அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.