பாலியல் குற்றங்களுக்கு எதிரான மசோதா: குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநர்!

Dinamani2f2024 09 062fpctyb4ck2fcv20anand20bose20west20bengal20governor20edi.jpg
Spread the love

மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, அபராஜிதா என்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதாவை அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

‘அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதா 2024’ எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து (குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி) பாதுகாப்பளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த மசோதாவை ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

அபராஜிதா மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார் மேற்கு வங்க ஆளுநர். மேற்கு வங்க அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், மசோதாவின் விவரங்களை அதன் உரிய மொழியாக்கத்தை விதிகளின்படி வழங்குவதில் மாநில சட்டப்பேரவை தவறியதற்கு ஆளுநர் மாளிகை அதிருப்தி தெரிவிக்கிறது.

மேற்குவங்க அரசு கொண்டுவந்துள்ள வன்கொடுமை தடுப்பு மசோதாவைப் போன்று, ஆந்திரம், மகாராஷ்டிரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவை நிலுவையிலேயே உள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவிப்பும் மேற்கோள் கட்டப்பட்டது. அரசியலமைப்பு உரிமைகளைக் கடைபிடிப்பதில் மாநில நிர்வாகம் தவறிவிட்டதாகவும் ஆளுநர் மாளிகை பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதாவின் சிறப்புகள்

நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் பொருட்டு அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி,

பெண்களை பாலியல் கொலை செய்தாலோ அல்லது பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் சுயநினைவை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டாலோ இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பரோல் இன்றி ஆயுள் தண்டனை வழங்கவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *