இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகியாக இருந்தவர் மதூர் சத்யா. சமூக வலைதளங்கள், ஊடக விவாதங்களில் தன்னுடைய அரசியல் கருத்துகளுக்காக பிரபலமடைந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புகளான ஏ.ஐ.ஒய்.எஃப், ஐ.எஸ்.சி.யு.எஃப் ஆகியவற்றில் தீவிரமாக இயங்கி வந்தார். இந்த நிலையில், மதூர் சத்யா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் இ-மெயில் மூலம் தங்கள் புகார்களை கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பினர். அந்தப் புகார்களை விசாரித்த கட்சி நிர்வாகிகள், அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்தனர்.
அத்துடன் பதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக காவல்துறை சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க கோரி புகார் கடிதத்தையும் அளித்து இருந்தனர். இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மதூர் சத்யா பெங்களூருவில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை மாலை பெங்களூருவில் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட அவர், விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.