பெங்களூருவில் பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர், தனது உறவினரின் பாலியல் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக இருந்த பெண்ணும், அவரது உறவினரான பிரவீன் சிங் என்பவரும் 6 ஆண்டுகளாக பழகி வந்தனர். இந்த நிலையில், அவர்கள் இருவரும் தனியே எடுத்த புகைப்படங்களையும் விடியோக்களையும் பெண்ணின் குடும்பத்தினரிடம் காட்டி விடுவதாகக் கூறி, பெண்ணை பிரவீன் பாலியல் ரீதியாக மிரட்டியுள்ளார்.
இதனையடுத்து, பெண்ணை பிரவீன் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, பெண்ணுக்கும் வேறொரு நபருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட, பிரவீனுடனான உறவினை தவிர்த்து வந்துள்ளார். இதனால், மீண்டும் பெண்ணை தீவிரமாக மிரட்டி வந்துள்ளார். மேலும், தனியார் விடுதி ஒன்றில் தன்னைச் சந்திக்க வருமாறு பெண்ணிடம் பிரவீன் கூறியுள்ளார்.