இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாலியல் குற்றத்தைச் செய்தவா்கள் யாராக இருந்தாலும் கைது செய்து மனநலம் பாதித்த மாணவிக்கும், குடும்பத்தாருக்கும் நியாயம் வழங்க வேண்டும்.
வன்கொடுமை செய்த கயவா்களை நாடும், தமிழக மக்களும் மன்னிக்க மாட்டாா்கள். அவா்கள் மீது திமுக அரசு போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.