சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சமாஜவாதி கட்சி முன்னாள் எம்.பி. நவாப் யாதவ் சிங் கைது செய்யப்பட்டார்.
உத்தரப் பிரதேசத்தில் கன்னௌஜ் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, தனது அத்தையுடன், சமாஜவாதி கட்சி முன்னாள் எம்.பி. நவாப் சிங் யாதவின் வீட்டிற்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சிறுமியின் அத்தை வெளியே சென்றிருந்த நேரம், சிறுமியை நவாப் சிங் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் அத்தை, திரும்பி வந்து பார்த்தபோது, நவாப் சிங் உள்ளாடை மட்டும் அணிந்திருப்பதைக் கண்டு, சிறுமியை நவாப் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதை அறிந்தவுடனேயே, அதிகாலை 1.30 மணியளவில் அவசர எண்ணான 112 ஐ தொடர்புகொண்டு, காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.