"பாலிவுட்டில் நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன்; அதனால் தான்..!"- பிரியங்கா சோப்ரா

Spread the love

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், ‘வாரணாசி’ படத்தில் நடித்து வருகிறார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

‘வாரணாசி’
‘வாரணாசி’

“பாலிவுட்டை விட்டு வெளி​யேற நான் நினைத்​த​தில்​லை. அங்கு பணிபுரிந்​தபோது பல காரணங்​களுக்​காக நான் ஒதுக்​கப்​படு​வதுபோல் உணர்ந்​தேன். அதனால் என் எல்​லையை விரிவுபடுத்த நினைத்தேன்.

ஒரு நடிகை​யாக எனக்கு உற்​சாக​மாக இருக்​கும் வாய்ப்​பு​களைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்​கத் தொடங்​கினேன்​.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும்.

‘வாரணாசி’மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களை கடந்து செல்வதுபோல் உணர்கிறேன்.

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால் இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம்” என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *