புதுதில்லி: தபால் நிலையங்கள் மூலம் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதுள்ள 442-ல் இருந்து 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அஞ்சலகங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவையை 5 ஆண்டுகளுக்கு தொடர வெளியுறவு அமைச்சகமும், அஞ்சல் துறையும் தங்களது ஒத்துழைப்பை புதுப்பித்துள்ளன.
தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவா கேந்திரங்கள் மூலம் பாஸ்போர்ட் சேவைகளை தொடர்ந்து அணுகுவதற்காக வெளியுறவு அமைச்சகம் மற்றும் தபால் துறை இடையே ஐந்து ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.