மோடி பிரதமராக 8-ந்தேதி பதவி ஏற்பு?
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தனிப்பெரும்பான்மை தொகுதிகள் கிடைக்கவில்லை. பா.ஜனதா கட்சிக்கு 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது.
பா.ஜனதா
இதேபோல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா 232 இடங்களை பிடித்து உள்ளன. இதனால் அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்தியா கூட்டணி கட்சி தலைவர் பா.ஜனதாக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேசி வருவதால் காங்கிரஸ் கட்சியும் மத்தியில் ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் தயவு கட்டாயம் தேவை என்ற நிலையில் பா.ஜனா அந்த கட்சிகளுடன் சேர்ந்து மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக. இதற்கான ஏற்பாடுகளை அந்த கட்சியினர் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
தனித்தனியாக ஆலோசனை
இதற்கிடையே இன்று இந்தியா கூட்டணி கட்சியினரும், தேசிய ஜனநாயக கூட்டணிகட்சியினரும் தங்களது ஆதரவு கட்சிகளுடன் இன்று (5ந்தேதி) மாலை தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தினர்.
பிரதமர்மோடி தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனால் அந்த கட்சியினர் நிம்மதி அடைந்து உள்ளனர். முன்னதாக சந்திரபாவு நாயுடு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடந்தது. இதில், ராகுல்காந்தி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், பிரியங்கா காந்தி, திரிணாமுல் காங்கிரசின் அபிஷேக் பாணர்ஜி, சிவசேனா உத்தவ் தாக்கரே கட்சியின் சஞ்சய் ராவத், ஜார்கண்ட் முதலமைச்சர் சாம்பாய் சோரன், சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து இழுபறியான நிலை நீடிப்பதால் தொடர்ந்து பரபரப்பான சூழலே நிலவி வருகிறது.
மக்களவை கலைப்பு
இதற்கிடையே பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி, 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார்.17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.
8ந்தேதி பதவி ஏற்பு?
இந்தநிலையில் ஆட்சி அமைக்கவும், கூட்டணி கட்சியினருக்கு மந்திரி பதவி உள்ளிட்ட அடுத்த கட்ட நகர்வில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக மோடி வரும் 8 ந்«தி (சனிக்கிழமை) பதவியேற்க உள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் வருகிற வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது.
இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. பின்னர் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின் ஜூன் 8 ந்தேதி 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பார் என்று பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதையும் படியுங்கள்: 2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்