கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஊட்டி தொகுதியை பா.ஜ.க கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவியது. இந்த தேர்தலில் ஊட்டி தொகுதியை பா.ஜ.க – விற்கு ஒதுக்கீடு செய்யக்கூடாது என அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
ஆனால், ஊட்டி தொகுதியை பா.ஜ.க -வுக்கு ஒதுக்கீடு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அ.தி.மு.க தலைமை. இதனை சற்றும் எதிர்பாராத அக்கட்சியின் நிர்வாகிகள், ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் நேற்று மாலை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.