பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து: 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை, மின்வாரிய இணையதளம் முடக்கம் – Kumudam

Spread the love

சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று(டிச. 20) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் கீழிருந்து தீ மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவியது.

காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 மாடிகள் கொண்ட பி.எஸ்.என்.எல். கட்டடத்தில் 2-வது மாடியில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் ஏராளமான மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

5 வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை அணைத்து வருகின்றனர். தீவிபத்து காரணமாக அண்ணாசாலை பகுதியில் பி.எஸ்.என்.எல் இண்டர்நெட், தொலைபேசி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தீ விபத்தால் பி.எஸ்.என்.எல். அலுவலக பகுதியில் கரும்புகை வெளியேறி வருகிறது.

காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் 108 அவசர ஆம்புலன்சு சேவை முடங்கியுள்ளது. இதனால் இலவச ஆம்புலன்சை பொறுவதில் மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகிறது. 108 அவசர சேவையை சரி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

இதே போன்று மின்சார வாரிய அலுவலகங்களில் மின்கட்டணம் செலுத்த முடியாமல் மக்கள் அவதி. மின்வாரிய ஆன்லைன் சேவைகள் பிஎஸ்எல்என் அலுவலக தீவிபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *