பிகாரில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், மின்னல் பாய்ந்து 19 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில், மட்டும் 19 பேர் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளதாக, அம்மாநிலத்தின் முதல்வர் அலுவலகம் இன்று (ஜூலை 17) தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அதிகப்படியாக நலந்தா மாவட்டத்தில் 5 பேரும், வைஷாலியில் 4 பேரும், பாங்கா மற்றும் பாட்னா ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும் மின்னல் பாய்ந்து பலியாகியுள்ளனர்.
இத்துடன், ஷேயிக்புரா, நவடா, ஜெஹானாபாட், அவூரங்காபாத், ஜாமுயி மற்றும் சமாஸ்டிபூர் ஆகிய மாவட்டங்களிலும் தலா ஒருவர் பலியாகியது பதிவாகியுள்ளது. இதையடுத்து, மோசமான வானிலைகளின் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, தனது இரங்கல்களைத் தெரிவித்த பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பலியானவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பரோல் கைதியை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்! மருத்துவமனையில் பயங்கரம்!