பிகாரில் 52 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்! – தேர்தல் ஆணையம்

dinamani2Fimport2F20202F122F172Foriginal2Fvote list
Spread the love

புது தில்லி: பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

7 லட்சம் போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பது தேர்தல் ஆணையத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது தெரிய வந்துள்ளது.

பிகாரில் வரும் டிசம்பர் இறுதிக்குள் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் செவ்வாய்க்கிழமை(ஜூலை 22) வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, பிகாரில் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 18 லட்சம் வாக்காளர்கள் ஏற்கெனவே காலமாகிவிட்டதும் தெரிய வந்துள்ளது.

மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7,89,69,844 ஆக இருக்கும் நிலையில், 97.30 சதவீதம் பேர் அதாவது 76,834,228 வாக்காளர்கள் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் உரிமை புதுப்பித்துக் கொண்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ள 52 லட்சம் வாக்காளர்களில், 18 லட்சம் பேர் ஏற்கெனவே மரணித்திவிட்டவர்கள் என்பதும், 26 லட்சம் வாக்காளர்கள் தங்கள் சொந்த சட்டப்பேரவைத் தொகுதியைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

பிகாரில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் பாஜகவுக்கு சாதகமானதொரு நடவடிக்கையாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதனால் இதற்கு எதிர்ப்பும் வலுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The electoral roll revision in Bihar has weeded out 52 lakh voters who are dead or migrated, the Election Commission said today

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *