இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது,
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து ஒரு பெண் பயணடைவார். இந்தத் திட்டத்தின் தொலைநோக்குப் பார்வையால் தான் ஈர்க்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் அளவு மிகப்பெரியது என்றும், பிகார் பெண்கள் மளிகைப் பொருள்கள், பாத்திரங்கள், அழகுசாதனப் பொருள்கள், பொம்மைகள் மற்றும் எழுதுபொருள்கள் விற்கும் கடைகளைத் திறக்கலாம்.
கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு போன்ற கால்நடை தொடர்பான தொழில்களையும் அவர்கள் தொடரலாம். இந்தத் தொழில்களுக்குத் தேவையான பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பிகாரில் ஏற்கெனவே சுய உதவிக் குழுக்களின் வலுவான வலையமைப்பு உள்ளது என்றும், கிட்டத்தட்ட 11 லட்சம் குழுக்கள் தீவிரமாகச் செயல்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சியிலிருந்தபோது நிலவிய பயங்கரவாதத்தை நினைவில் கொள்ள வேண்டும். அப்போது எந்த மக்களும் பாதுகாப்பாக இல்லை. நக்சல் வன்முறையின் பயங்கரவாதம் பரவலாக இருந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பெண்களுக்குச் சுமையாக இருந்தது. நிதிஷ் குமாரின் தலைமையில் பெண்கள் மிகப்பெரிய நிம்மதியை உணர்ந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.