பிகார்: ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15-வது பாலம்!

Dinamani2f2024 072ff56bb63a A536 4511 84be 9871bc46da7c2f15bridge.jpg
Spread the love

பிகார் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மற்றொரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இடிந்து விழுந்த 15-வது பாலம் இதுவாகும்.

அராரியா மாவட்டத்தில் அம்ஹாரா கிராமத்தில் பர்மன் ஆற்றை கடப்பதற்காக பொதுப்பணித் துறையால் 2008 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாலம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் செவ்வாய்க்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்டது.

இந்த பாலம் ஏற்கெனவே 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்குள் பிகார் மாநிலத்தில் 15 பாலங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், ஏற்கெனவே நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 பொறியாளர்களை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

பிகாரில் இடிந்த முக்கிய பாலங்கள்

ஜூன் 18 அராரியா (பக்ரா நதி)

ஜூன் 22 சிவன் (கண்டக் நதி)

ஜூன் 23 கிழக்கு சம்பாரன்

ஜூன் 27 கிஷன்கஞ்ச்

ஜூன் 30 கிஷன்கஞ்ச்

ஜூலை 3 சரண் (இரண்டு பாலங்கள்)

ஜூலை 3 சிவன் (மூன்று பாலங்கள்)

ஜூலை 4 கிழக்கு சம்பாரண் (இரண்டு பாலங்கள்)

ஜூலை 10 சஹர்சா

ஜூலை 15 கயா

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *