இதனால் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. சடலங்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அறிக்கை கிடைத்த பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும் என்றும் டிஐஜி தெரிவித்துள்ளார்.
சிவான், சரண் மற்றும் பாட்னா மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல் என முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.
முன்னதாக, கோபால்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அவ்தேஷ் தீட்சித் வெள்ளிக்கிழமை கூறியதாவது, சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இந்த விவவகாரத்தை விசாரித்து வருவதாகவும், 14 பேர் கைது செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.