`பிகில் படத்தில் விஜய்யின் இந்தக் காட்சி எனக்கு மிகவும் பிடிக்கும்' – சீமான்

Spread the love

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025′ விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சீமானிடம் சில பிரபலங்களைத் திரையில் காட்டி, கேள்விகள் கேட்டோம்.

அந்த அனைத்துக் கேள்விகளுக்கும் அதகள பதில்களைச் சொல்லி, ‘கலகல’த்தார் சீமான். அவர் பேசிய வார்த்தைகள்…

“சிம்பு – சிலருக்கு நடிப்பு வரும்… சண்டைக்காட்சி வராது. சிலருக்கு நகைச்சுவை வராது. ஆனால், எல்லாத் திறமைகளையும்கொண்ட என் தம்பி இன்னும் அவனுக்குண்டான உச்சத்தைத் தொடவில்லை. அடுத்த படம் வரும்போது கண்டிப்பாக உச்சம் தொடுவான்.

சீமான்
சீமான்

பிரதீப் ரங்கநாதன் – `கோமாளி’ படம் பார்த்து வியந்துவிட்டேன். க்ளைமாக்ஸில், மழை வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவியவரின் பெயர் ‘ஜோசப்.’

சின்ன வயதிலேயே மத நல்லிணக்கம் அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

மாதவன் – அவருக்கு எப்போதும் தமிழில் வாழ்த்து அனுப்புவேன். முன்பெல்லாம் சிரமப்பட்டார். ஆனால், இப்போது ஏஐ-யில் என் வாழ்த்தை மாற்றி எனக்கே காட்டுகிறார்.

விஜய் – அவருடைய `மெர்சல்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். `பிகில்’ திரைப்படத்தில் பெண்களை ஊக்கப்படுத்தி, ‘வெளியே வா’ என்கிற ஒரு காட்சி வரும். எனக்கு அந்தக் காட்சி மிகவும் பிடிக்கும்.

உதயநிதி – அப்பா முதலமைச்சராக இருந்தாலும், அவர் மிகப்பெரிய பொறுப்பில் இருந்தாலும் சகஜமாகப் பழகுவார். அவரும் எனக்கு தம்பிதான்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *