பிக்பாஸ் சீசன் 8 வெற்றியாளர்: முத்துக்குமரன்!

Dinamani2f2025 01 192f3etjiz6s2fghrhiyjauaajzb3.jpg
Spread the love

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். சாதாரண மனிதனின் வெற்றியென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி எப்போதும்போல மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இந்த சீசனில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இதுநாள் வரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. அவருக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

24 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதி நாளில் விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா ஆகிய 3 போட்டியாளர்கள் இருந்தனர்.

3ஆவது இடத்தை விஷால் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை சௌந்தர்யா நஞ்சுண்டான் பிடித்தார்.

சௌந்தர்யா.

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கோப்பையுடன் ரூ.40.50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *