நிறைவுப் பகுதியை நெருங்கி விட்டது பிக்பாஸ் சீசன் 9.
திவாகர், பிரவீன் காந்தி, வி.ஜே பார்வதி, கமருதீன் உள்ளிட்ட இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு அமித் பார்கவ், பிரஜின், சான்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு மூலம் இணைந்தனர்.
முதல் வார எவிக்ஷனுக்கு முன்பே சில காரணங்களால் நந்தினி வெளியேறினார்.
தொடர்ந்து அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் ஆதிரை, பிரவீன் காந்தி, துஷார், எஃப்.ஜே, கனி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர்.
கடந்த வாரம் அதிரடியாக கமருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப் பட்டனர்.
தற்போது வினோத், விக்ரம், சபரி, சான்ட்ரா, அரோரா, திவ்யா ஆகிய ஆறு பேர் நூறாவது நாளை நோக்கி முன்னேறியுள்ளனர்.

கமருதீன், பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு தந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டைத் தாண்டி வெளியில் பெரிதும் பேசப்பட்டது.
குறிப்பாக முந்தைய பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் சான்ட்ராவுக்கு பகிரங்கமாக ஆதாவு தெரிவித்து, பார்வதி, கமருதீன் இருவரையும் வெளியேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தப் பின்னணியில் முன்னாள் போட்டியாளரான நடிகர் கூல் சுரேஷிடம் பேசினோம். இவருடைய கருத்தோ வேறொரு கோணத்தில் இருக்கிறது.