பிக் பாஸ் உளவியல் துறை பாடம்: ஜாக்குலினிடம் தீபக் விளக்கம்!

Dinamani2f2024 12 302ff2l4xdkr2fdeepak Bigg Boss Edi 2.jpg
Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சி உளவியல் பயிலும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடமாகக் கூட எடுத்துக்கொள்ளலாம் என நடிகை ஜாக்குலினிடம் தீபக் கூறும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதில் உள்ளே வரும் போட்டியாளர்கள் 100 நாள்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள்.

இதற்கிடையே பிக் பாஸ் வைக்கும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதன் மூலம் தனி மனிதர்களின் உணர்வுகள் பரிசோதனை செய்யப்படும். 100 நாள்களில் வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவர். அதுவும் மக்கள் வாக்குகளின் அடிப்படையில்தான்.

ஆகவே மக்களைக் கவரும் வகையிலும் அவர்கள் விளையாட வேண்டும். இதுவே பிக் பாஸ் போட்டி. அதுவே நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 13வது வாரத்தை எட்டியுள்ளது. 85வது நாளான இன்று பிக் பாஸ் வீட்டில் 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் சச்சரவுகள் குறைந்து புரிதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நிகழ்ச்சியில் பொழுதுபோக்கு அம்சம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி உளவியல் துறை படிக்கும் மாணவர்களுக்கான பாடம் என்று ஜாக்குலினிடம் நடிகர் தீபக் பேசும் விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

ஜாக்குலினிடம் தீபக் பேசியதாவது,

”உளவியல் பயிலும் மாணவர்கள் நிறுவனப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) எடுத்துக்கொள்ள சிறந்த இடம் பிக் பாஸ். அதற்கு அவர்கள் பிக் பாஸ் பார்த்தால் போதும். வீட்டிற்குள் வரும் போட்டியாளர்களை சப்ஜெக்ட் 1, சப்கெஜ்ட் 2 என எடுத்துக்கொண்டு அவர்கள் ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்தனர் என்பதை குறிப்பெடுத்து வைத்தாலே போதும்.

சிந்தனை திறன், இயற்கையான சுபாவங்கள், கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம், வெளிப்படுத்தும் விதம், பொறுமை அளவு என பல பிரிவுகளில் போட்டியாளர்களை கவனித்தால் அதில் கிடைக்கும் தரவுகள் ஆய்வுக் கட்டுரைக்குச் சமமானது.

முதல் நாளில் என்னென்ன செய்தார்கள். 10 நாள்கள் கழித்து என்னென்ன செய்தார்கள். 50 வது நாளில் அவர்கள் என்னவாக மாறியுள்ளார்கள். அவர்களுக்குள் நிகழ்ந்த மாற்றத்துக்கு காரணம் என்ன? பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் எப்படி நுழைந்தார்கள். பிக் பாஸ் வீட்டை விட்டுச் செல்லும்போது என்னவாகச் செல்கின்றனர் என பலவற்றை பட்டியலிடலாம்.

இந்த சீசனில் 90% போட்டியாளர்கள் நடிகர்கள் என்பதால், அவர்களால் உணர்வுகளை எளிதாகக் கையாள முடியும். ஆனால், அவர்களின் இயற்கை சுபாவம் எப்படி உணர்வுகளால் சிதைகிறது என்பதை தரவுப்படுத்தலாம். இதன்மூலம் உளவியல் படிப்பவர்களுக்கு சிறந்த அனுபவம் கிடைக்கும்” என ஜாக்குலினிடம் பேசுகிறார்.

”பிக் பாஸ் வீடு ஏன் முழுவதும் கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது என்பதை முன்பே நான் சிந்தித்துள்ளேன். ஆனால், அதற்கான பொருள் இப்போதுதான் புரிகிறது. இது நம்மை பிரதிபலிக்கிறது” என தீபக் குறிப்பிடுகிறார். தீபக் பேசிய இந்த விடியோவுக்கு பலரும் ஆதர்வு தெரிவித்து வருகின்றனர். நடிகராக இருந்தாலும், தீபக்கின் சிந்திக்கும் திறன் குறித்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ்: 13வது வார நாமினேஷன் பட்டியல்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *