பிக் பாஸ் காதலர்களான அமீர் – பாவனி திருமண நாள் அறிவிப்பு!

Dinamani2f2025 04 152ff326u8hs2famir Pavani.jpg
Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் – பாவனி ஜோடி, தங்கள் திருமண நாளை இறுதி செய்துள்ளனர்.

விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், திருமண நாள் குறித்து தற்போது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்ற பாவனியிடம், வைல்ட்கார்டு மூலம் நுழைந்த அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார்.

பிக் பாஸ் டிஆர்பிக்காக இவ்வாறு செய்யபப்டுகிறது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், நிகழ்ச்சிக்கு பின்னரும் பாவனி மீது அதே அளவு காதல் கொண்டிருந்தார் அமீர்.

pavani amir pair edi
அமீர் – பாவனி

ரியாலிடி நிகழ்ச்சி மேடையில் அமீர் வெளிப்படுத்திய காதலை பாவனி ஏற்றுக்கொண்டார். தங்கள் வாழ்வின் அடுத்தகட்டத்தை நோக்கி முடிவெடுக்கும் தருணத்தில் இருவரும் நெகிழ்ச்சியாக அந்த மேடையைப் பகிர்ந்துகொண்டனர்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில், இருவரும் கொண்டிருந்த அன்பு மற்றும் முறையான பயிற்சியின் மூலம் அந்த நிகழ்ச்சியின் வெற்றி பெற்ற ஜோடியானார்கள்.

இதனால் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்விலும் இருவரின் காதலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைத்தது.

இருவரும் இணைந்து நடிகர் அஜித் குமாரின் துணிவு படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தில் இருவரின் பாத்திரங்களும் வெகுவாக பாராட்டப்பட்டது.

Amir pavani white
அமீர் – பாவனி

சின்ன திரை நடிகையான பாவனி, ரெட்டை வால் குருவி தொடரில் தமிழில் அறிமுகமானார். இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் 3 தொடர்களில் பாவனி நடித்திருந்தார்.

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பாசமலர், சின்னத் தம்பி, நீலக்குயில், ராசாத்தி உள்ளிட்டத் தொடர்களில் நடித்து புகழ் பெற்றார்.

இதேபோன்று, தொழில்முறை நடனக் கலைஞரான அமீர், நடனத்தில் முழுவதும் கவனம் செலுத்திவருகிறார்.

இருவரும் தங்கள் துறையில் பயணித்துவரும் நிலையில், ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது இருவரும் வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதனை ரசிகர்களுடன் இருவரும் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இவர்களுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ஒவ்வொரு வலியும் பாடம்… சோகத்தை புன்னகையுடன் பகிர்ந்த சிறகடிக்க ஆசை நாயகி!

இதையும் படிக்க | மகளின் புகைப்படத்தைப் பகிர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *