பிக் பாஸின் தண்டனை, வீட்டார் கண்டனம் – எதற்கும் அடங்காத பாரு – கம்மு ஜோடி
“இவங்க பேசிக்கிட்டே இருக்காங்க” என்று மற்றவர்கள் புகார் செய்த போது ‘தனியா வந்து உக்காருங்க பாரு’ என்று நீதிபதி சொன்னால் கூட பாரு அதற்குச் சம்மதிக்கவில்லை. ‘எங்களை யாரும் பிரிக்க முடியாது’ என்கிற மாதிரி அழிச்சாட்டியமாக அமர்ந்திருந்தார்.
“மத்தவங்க யாராவது இப்படி மைக்கை மறைச்சு பேசறதைப் பார்த்திருக்கீங்களா?” என்கிற கேள்வியை எழுப்புவதின் மூலம் பாருவிற்கு சப்போர்ட் செய்ய முயன்றார் அமித். “ஆமாம். அரோரா, துஷார் கிட்ட அப்படி பேசியிருக்கா” என்று பாரு சொல்ல, “அதனால்தான் துஷாரோட தல பதவி பறிக்கப்பட்டது” என்கிற பாயிண்டை சிறப்பாக ஞாபகப்படுத்தினார் வியானா.
கோர்ட்டிலேயே பாருவிற்கும் FJ-விற்கும் இடையில் அவ்வப்போது முட்டிக் கொண்டது. “அவங்கதான் பேசிட்டே இருக்காங்க” என்று ஸ்கூல் பிள்ளைகள் போல சண்டை போட்டுக் கொண்டார்கள். “குடும்பத்துல பேருக்கு மட்டும்தான் லாயர் போல” என்று முணுமுணுப்பாக கமெண்ட் அடித்தார் FJ. இதனால் கோபம் கொண்ட பாரு அதை ஆட்சேபிக்க, கோர்ட்டில் சலசலப்பு.
பாருவின் தந்தை வழக்கறிஞர் போல. இதைச் சுட்டிக் காட்டி FJ கிண்டலடித்ததால் பாருவிற்குக் கோபம் வந்தது நியாயம். “என் ஃபேமிலியையெல்லாம் இழுக்காத” என்று பிறகும் தனியாக வந்து ஆட்சேபித்தார் பாரு. ஆனால் ‘குடும்பத்திற்கே பால் ஊத்துவான் போல’ என்று FJவின் குடும்பம் பற்றி மிக மோசமாக பிரஜன் கமெண்ட் அடித்ததை வீக்கெண்ட் ஷோவில் அறிந்த FJ ஆத்திரப்பட்ட போது ‘ரொம்ப துள்றான் சார்’ என்று சொன்னவரும் இதே பாருதான்.