தானும் சும்மா இருந்து, மற்றவர்கள் வேலை செய்வதையும் தொந்தரவாக நினைத்த சான்ட்ராவிடம் “இதப் பாக்கறதுக்காக மக்கள் சப்ஸ்கிரைப் பண்றாங்க?” என்று கேட்டார் விசே.
அதே கேள்வியை இன்னொரு கோணத்திலும் வைக்கலாம். ‘பாரு – கம்முவிற்கு இடையே பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடக்கும் ‘டாக்ஸிக் லவ்’ சண்டையைப் பார்ப்பதற்காகவா பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? ஏன் அந்தக் காட்சிகளையே காட்டுகிறீர்கள்?
ஒரு பக்கம், துஷார் என்றாலே கண்கலங்கும் அரோரா, இன்னொரு பக்கம் எதிராளியை பேச விடாமல் தானே மூச்சு விடாமல் பேசி இம்சிக்கும் திவ்யா, கம்ருதீனை ஏற்றி விட்டு அழகு பார்க்கும் வினோத், பீட் பாக்சிங் இம்சை சுபிக்ஷா, அவ்வப்போது அழ ஆரம்பித்திருக்கும் விக்ரம், சைலண்ட்டாக இருந்து வயலென்ட் செய்யும் சான்ட்ரா, நெகட்டிவிட்டியால் நிரம்பியிருக்கும் பாரு..
இவர்களைப் பார்ப்பதற்கா மக்கள் சானலை சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்? பிக் பாஸ் டீம் இதை யோசிக்குமா?….
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 85
பல விஷயங்களில் அடாவடியாக நடந்து கொள்ளும் பாரு, ரொமான்ஸ் விஷயத்தில் மட்டும் கம்ருதீனிடம் பம்முகிறார். ஏனெனில் இது அவரது இமேஜை ஆழமாக பாதிக்கும் விஷயம்.
‘என்னை பேட் டச்சுன்னு சொல்லிட்டா.. எனக்கு மானமே போச்சு.. அதுக்கு தீர்வு வேணும்’ என்று மீண்டும் மீண்டும் இந்த விஷயத்தை நோண்டிக் கொண்டேயிருக்கும் கம்ருதீனின் பக்கம் செய்வது அநியாயமாகத் தெரிகிறது.
லவ் பண்ணும் போது கிளுகிளுப்பாக இருப்பது, அதில் ஒரு பிரச்சினையென்றால் உடனே கொடூரனாக மாறுவது.. என்று ஒரு ‘டாக்ஸிக் காதலன்’ பாத்திரத்தில் கம்ருதீன் கச்சிதமாகப் பொருந்துகிறார்.
கம்ருதீனின் முன்கோபமும் முரட்டுத்தனமும் பாருவிற்கு நன்றாகவே தெரியும். எனினும் அவரிடமிருந்து உடனே விலகாமல் ‘எங்க ரிலேஷன்ஷிப் நட்புக்கு மேலே.. காதலுக்கு கீழே’ என்று வியாக்கியானம் செய்துகொண்டு கம்முவுடன் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருந்தார்