பிக் பாஸ் சீசன் 9-ன் 88வது நாளில் நடந்தது என்ன? |What happened on day 88 of Bigg Boss Season 9?

Spread the love

‘பிராடு சான்ட்ரா’ – வார்த்தையை விட்ட ‘அட்ராசிட்டி’ கம்ருதீன்

புத்தாண்டு அலங்காரத்துடன் நாள் 88 விடிந்தது. “யப்பா.. டேய்.. நீயும் பாருவும் சேர்ந்து ஆடறீங்களே.. ஒரு ஆட்டம். எங்களுக்குப் புரியவேயில்ல. அப்படி அடிச்சிக்கிட்டீங்க.. அப்புறம் ஒண்ணா சேர்ந்துக்கறீங்க.. இனிமே நாங்க உள்ளே வர மாட்டோம்.. உங்க பர்சனல் இது” என்று விக்ரம், சபரி, சான்ட்ரா உள்ளிட்டோர் கம்முவைப் பார்த்து சொல்லி கை கழுவி விட்டார்கள். 

பிரேக் அப்பில் இருந்த சமயத்தில், தன்னைப் பற்றி பாருவிடம் சான்ட்ரா தப்புத் தப்பாகப் பேசி வைத்திருப்பாரோ என்கிற சந்தேகத்தில் இருக்கிறார் கம்மு. கிச்சன் ஏரியாவில் இருவருக்கும் உரசல் ஆரம்பமாகியது.

“உங்களை எனக்கு பிடிக்கும் சான்ட்ராக்கா” என்று கம்மு பாவனையாக ஆரம்பிக்க, “உன்னை எனக்குப் பிடிக்காது. இதை முகத்திற்கு நேராத்தான் சொல்றேன். பின்னாடி பேசல” என்று சீறினார் சான்ட்ரா.

“நான் லவ் கேம் ஆடறேன்னு நீங்க சொன்னீங்க” என்று கம்மு சொல்ல அதை மறுத்தார் சான்ட்ரா. கனியோடு ஒப்பிட்டு கம்மு பேச சான்ட்ராவிற்கு இன்னமும் கோபம் ஏறியது. “பாரு.. உன்னாலதான் இந்தப் பேச்சையெல்லாம் நான் கேட்க வேண்டியிருக்கு. நான் அப்படி சொல்லலன்னு நீ சொல்லியிருக்க வேண்டியதுதானே.. நீ ஏன் சொல்ல?” என்று பாருவை நோக்கியும் சீறினார் சான்ட்ரா. “அதுக்குத்தான் அவனை நான் distract பண்ணேன்” என்று சமாளித்தார் பாரு. 

மீண்டும் அழுகையை ஆரம்பித்த சான்ட்ரா 

சான்ட்ராவிற்கும் கம்முவிற்குமான உரையாடலின் உஷ்ணம் ஏறிக் கொண்டே போக ஒரு கட்டத்தில் ‘பிராடு’ என்கிற வார்த்தையை கம்மு விட்டு விட, சான்ட்ராவின் கோபம் உச்சத்திற்குச் சென்றது. “இனிமே என்னை அக்கான்னுல்லாம் கூப்பிடாத. யாரு பிராடு. வார்த்தையை அளந்து பேசு” என்று சீறிய சான்ட்ரா, பிறகு அழுகையுடன் கார்டன் ஏரியாவிற்கு நகர்ந்து விட்டார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *