சான்ட்ராவின் பயக்கூச்சல் – உண்மையா, நாடகமா?
மறுநாள் காலை. பாருவிற்குள் அச்சமும் குற்றவுணர்வும் எழுந்திருக்க வேண்டும். “இந்த வாரம் என்னைத் துரத்தினா ஏத்துக்கறேன்” என்று முனகுகிறார். வேக் அப் பாடலின் போது இறங்கி குத்தி ஆவேசமாக ஆடுகிறார்.
இதுதான் கடைசி ஆட்டம் என்பது அவருக்கே தெரிந்து விட்டதோ, என்னமோ. ‘உன் பொண்டாட்டி நான் இல்லடா’ என்று பாடல் ஒலிக்கும் போது வினோத்தை நோக்கி குறும்பாக கை காட்டுகிறார் அரோ.
பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குக்கூட அச்சப்படுகிற சான்ட்ராவை, ‘நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார் அரோ. எல்கேஜி குழந்தை போன்று நடுக்கத்துடன் வருகிறார் சான்ட்ரா. அது உண்மையான மனப்பதட்டமா அல்லது அனுதாப நோக்கிலான நடிப்பா என்பது அவருக்கே வெளிச்சம்.
“நான் ஒண்ணும் வில்லன் கிடையாது. சான்ட்ராதான் என்னை டிரிக்கர் பண்ணாங்க. காமருதீன்னு சொன்னாங்க” என்று இன்னமும் தன்னை நியாயப்படுத்துகிற கம்மு, அதற்காக விக்ரமை அடிக்கவும் துணிகிறார். “எனக்கு சண்டை போடத் தெரியாது. ஆனா அடிடா பார்க்கலாம்” என்று மல்லுக்கட்டுகிறார் விக்ரம்.
பாருவும் கம்முவும் சரண்டர் ஆகி விடும் மனநிலையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கம்மு சொன்ன விளக்கம் காமெடியாக இருந்தது. “நான் உதைக்கல. காலால புஷ் பண்ணேன்”…
இவற்றையெல்லாம் டிவியில் பார்த்த விசே “என்னால முடியல.. ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு” என்று சிரித்தபடி நகர்கிறார். விசே உள்ளே வருவதற்கு முன்னால் ‘மதுரைக்குப் போகாதடி’ பாடலுக்கு பாருவும் கம்முவும் எவ்வித குற்றவுணர்ச்சியுமின்றி நடனம் ஆடுகிறார்கள். சானல் காப்பாற்றி விடும் என்கிற நம்பிக்கை. ஆனால் பாருவை மதுரைக்கே அனுப்பி வைத்து விட்டார்கள்.