பிக் பாஸ் சீசன் 9 வியானா என்ட்ரி – விக்ரமை உடைப்பதற்கான பிளானா? | What happened on day 92 of Bigg Boss Season 9?

Spread the love

இந்த வியானாவை எதற்கு உள்ளே வரவழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஏதாவது சீரியஸாக பேசி போட்டியாளர்களை உளவியல் ரீதியாக பாதிக்க வேண்டும் என்பது பிளான் போல. ஏற்கெனவே டவுன் ஆகியிருக்கும் விக்ரம் மட்டுமே அதிகம் நொந்து போனார். 

மற்றபடி வியானா செய்வதெல்லாம் ‘கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத’ ரேஞ்சில்தான் இருக்கிறது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 92

‘யார் இறுதி வரைக்கும் செல்லக்கூடிய போட்டியாளர்?’ என்று விக்ரமும் அரேராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்கோர் போர்டில் உயர்ந்த இடத்தில் இருந்து, டிக்கெட்டை வெல்லக்கூடிய வாய்ப்பு அதிகமிருந்த சபரி, சான்ட்ராவிற்கு உதவ காரில் இருந்து இறங்கினார். டிக்கெட்டை பறிகொடுத்தார். அந்த நற்குணத்திற்காக அவரே ஃபைனல் செல்ல வேண்டும் என்று இருவரும் சொன்னது சிறப்பு. 

“வினோத்திற்கு இன்னமும் பக்குவம் வரலை. கோபத்தை கை விட முடியலை” என்று அரோ சொன்னது ஓகே. ஆனால் ‘சான்ட்ராவிற்கு நியாயம் கிடைச்சாகணும்’ என்கிற மாதிரி சொன்னது மட்டும் சரியில்லை. 

வினோத் ரகசியமாக கடிதம் எழுதுவதை வைத்து “ஸாரியெல்லாம் வேணாம்..அதான் பேண்ட் போட்டிருக்கீங்களே’ என்று 1980-ம் காலத்து காமெடியெல்லாம் செய்து கொண்டிருந்தார் பிக் பாஸ். ‘ரெண்டு பேனா வெச்சிருக்கீங்களே?’ என்று அவர் சொன்ன போது வில்லங்கமான காமெடி செய்கிறாரோ என்று தோன்றி விட்டது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *